லண்டனைச் சேர்ந்த உலக விலங்குகள் பாதுகாப்பு மையம், வங்காளம் உடும்பு மற்றும் மஞ்சல் உடும்பு ஆகியவற்றின் காய்ந்த ஆணுறுப்பை ஹத்தா ஜோடி என கூறி விற்பனை செய்து வருதாக தெரிவித்துள்ளனர். ஹத்தா ஜோடி செடி இந்தியாவில் தற்போது இல்லாத நிலையில் சில மர்ம நபர்கள் உடும்பின் காய்ந்த ஆணுறுப்பை ஹத்தா ஜோடி என கூறி உலகளவில் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் விலங்குகள் அழியும் அபாய பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இந்த வங்காளம் உடும்பு மற்றும் மஞ்சல் உடும்பு பெயர்கள் இடம்பெற்றுள்ளது. வன குற்றம் கட்டுப்பாட்டுத்துறை மேற்கொண்ட சோதனையில் ஒடிசா மாநிலத்தில் ஏராளமான உடும்பின் ஆணுறுப்புகள் கைப்பற்றப்பட்டது. மேலும் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சோதனை நடைப்பெற்று வருகிறது.