பிரதமர் மோடிக்கு நேதாஜி குடும்பத்தினர் கொடுத்த பெருமைமிக்க பரிசு

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (20:10 IST)
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 112வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேதாஜி அணிந்த தொப்பியை அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசாக வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது, ' நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அணிந்திருந்த தொப்பியை அவரது குடும்பத்தினர் எனக்கு பரிசாக அளித்தனர்.  இதற்காக அவர்களுக்கு நான் நன்றி உடையவனாக இருக்கிறேன்.

இந்த தொப்பி செங்கோட்டை வளாகத்தில் உள்ள கிரந்தி மந்திரில் அமைந்த கேலரிக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டு உள்ளது.  இங்கு வரும் இளைஞர்கள் பலருக்கு நேதாஜியின் வாழ்க்கை எழுச்சியூட்டும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என  குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் உள்ள நேதாஜியின் மியூசியத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்