பாலியல் வன்கொடுமைகளை அரசியலாக்க வேண்டாம்: மோடி

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (11:56 IST)
பிரதமர் மோடி லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கு இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இது குறித்து மோடி எந்த ஒரு கருத்தையும் வெளியிடாமல் இருந்தார். 
 
இந்நிலையில், தற்போது லண்டனில் இந்திய வம்சாவளிடுனர் முன் பேசும் போது இது குறித்து தனது கருத்துகளை பதிவிட்டார். அவர் கூறியதாவது, குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் போது, நாம் கடந்த கால அரசாங்கத்தின் போது நடைபெற்ற எண்ணிக்கையோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது. 
 
பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் வன்கொடுமைதான். இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? இப்பிரச்சனையில் அரசியல் செய்யக்கூடாது. பாலியல் தாக்குதல்கள் இந்தியாவை அவமானப்பட  வைக்கும் செயல் ஆகும். 
நமது நாட்டில் பெண்களே கேள்விக்குள்ளாக்கப்படுகின்றனர். இதுபோன்ற குற்றங்களை செய்யும் ஆணும் யாரோ ஒருவரின் மகன்தான். இது தேசத்துக்கே அவமானம் தரக்கூடியது என தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் ஆஷிபா என்ற 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்திலும், உத்திர பிரதேசத்தில் 17 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதிலும், பாஜகவினர் தொடர்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்