சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த மன்மோகன் சிங் “நான் பிரதமராக இருந்த போது, மவுனமாக இருப்பதாக என்னை மோடி குற்றம் சாட்டினார். அந்த பெயரோடுதான் ஆட்சி முழுவதும் நான் இருந்தேன். ஆனால், தற்போது பிரதமராக இருக்கும் போடி முக்கிய பிரச்சனைகளுக்கு வாய் திறக்காமல் இருப்பது ஏன்?
கத்துவா, உனா பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் இந்திய மக்கள் கோபத்தில் உள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி தன் மவுனத்தை கலைத்து முன்கூட்டியே கருத்து கூறியிருக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.