மோடியின் கல்வித் தகுதி குறித்து மீண்டும் சர்ச்சை

Webdunia
வியாழன், 5 மே 2016 (06:30 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்த ஆவணங்களை வெளியிட முடியாது என குஜராத் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 

 
தங்களது பல்கலைக் கழகத்தில் இருந்து தொலைநிலை கல்வி மூலம் மோடி எம்.ஏ. பட்டம் பெற்றதாக குஜராத் பல்கலைக் கழகம் கூறியது.
 
இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்த ஆவணங்களை வெளியிட வேண்டும் என குஜராத் மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்களை மத்திய தகவல் ஆணையம் கேட்டுக் கொண்டது.
 
மேலும், மோடி பி.ஏ. பட்டம் குறித்த ஆவணங்களை வெளியிடுமாறு டெல்லி பல்கலைக் கழகத்திற்கு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார்.
 
இந்த நிலையில், மோடியின் கல்வித் தகுதி குறித்த ஆவணங்களை வெளியிட முடியாது என குஜராத் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
 
அடுத்த கட்டுரையில்