இளைஞர்கள் சுதந்திர போராட்ட கதைகள் எழுதணும்! – பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஞாயிறு, 31 ஜனவரி 2021 (13:14 IST)
மாதம்தோறும் மன் கீ பாத் நிகழ்ச்சி வழியாக நாட்டு மக்களிடையே பேசும் பிரதமர், இளைஞர்களை சுதந்திர போராட்ட கதைகளை எழுத அறிவுறுத்தியுள்ளார்.

மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் மோடி மன் கீ பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் பேசி வருகிறார். இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் “குடியரசு தினத்தின்போது விவசாயிக போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறைகள் வருத்தத்தை தருகின்றன. எதற்கும் வன்முறை தீர்வாகாது. குடியரசு தினத்தன்று தேசிய கொடி அவமதிக்கப்பட்டது வேதனைக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில் இளைஞர்கள் சுதந்திர போராட்டம் குறித்து அதிகம் எழுத வேண்டும். அவரவர் பகுதியில் சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த சம்பவங்களை நூல்களாக எழுத வேண்டும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்