ஜூன் 21 ஆம் தேதி வரவிருக்கும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாரத பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் மோடி அனிமேஷனில் யோகா செய்யும் வீடியோவை பகிர்த்திருக்கிறார்.
2014 ல் மோடி முதன்முறையாக ஆட்சிக்கு வந்ததிலிருந்து யோகாவிற்கு பெரும் முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் சர்வதேச யோகா தினத்தை தனது கட்சி அமைச்சர்களுடனும் தொண்டர்களுடனும் சேர்ந்து யோகாசனங்கள் செய்வார்.
இப்பொழுது இரண்டாவது முறையாக ஆட்சியை வென்ற மோடி ஜுன் 21 அன்று வரவிருக்கும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா கலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோகும் விதமாக ஒரு தொழில்நுட்ப குழுவை அமைத்து, மோடி யோகா பயிற்சி செய்வது போலான வீடியோவை வடிவமைத்துள்ளார்.
இந்த அனிமேஷன் வீடியோவில் மோடி யோகா கலைகளில் ஒன்றான “தடாசனா” என்ற யோகா பயிற்சி செய்வது போல் வடிவமைத்து உள்ளனர். மேலும் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ”தடாசன பயிற்சி செய்வதன் மூலம் மற்ற ஆசனங்களை நாம் எளிதில் பயிற்சிபெற்று விடலாம்” என்றும் பதிவு செய்திருக்கிறார்.
பிரதமர் மோடியின் அனிமேஷன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ...
Doing Tadasana properly would enable you to practice many other Asanas with ease.