டெல்லி கிளம்பினார் முதல்வர் முக ஸ்டாலின்! இன்று பிரதமருடன் சந்திப்பு!

வியாழன், 17 ஜூன் 2021 (07:33 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று 11:30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க விருப்பதை அடுத்து சற்று முன்னர் அவர் விமானம் மூலம் அவர் டெல்லி கிளம்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சென்னையிலிருந்து சற்றுமுன்னர் மு க ஸ்டாலின் டெல்லி புறப்பட்ட தாகவும் அவருடைய விமானம் சற்று முன்னர் கிளம்பியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு முதல்வர் பயணம் செய்து வருவதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் அவர் டெல்லி சென்றடைவார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தமிழகத்தின் தேவை குறித்து பிரதமரின் சந்திப்பின்போது அவர் வலியுறுத்துவார் என்றும் குறிப்பாக தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் மற்றும் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் பெறுவதற்கு அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம், செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்துவது, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் முக ஸ்டாலின் பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்