ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி: நொடியில் நடந்த விபரீதம் – பதறவைக்கும் வீடியோ

Webdunia
சனி, 28 செப்டம்பர் 2019 (17:51 IST)
அகமதாபாத்தில் ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி ரயிலுக்கு கீழே பயணி ஒருவர் மாட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் நிலையங்களில் ப்ளாட்பாரத்தில் ரயில் வந்து நிற்கும் முன்னரே இடம் பிடிப்பதற்காக ஓடிப்போய் ஏறுவதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அவர்கள் கவலைப்படுவதாக தெரியவில்லை. சிலசமயம் அப்படி இடம்பிடிக்க நினைத்து ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுக்கி விழுந்து, ரயில் சக்கரங்களில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் நடந்தேறியுள்ளன.

அப்படி ஒரு சம்பவத்தைதான் சமீபத்தில் ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அதில் ஒருவர் ப்ளாட்பாரத்தில் மெதுவாக சென்று கொண்டிருக்கும் ரயிலி பையை உள்ளே போட்டு விட்டு பின்னாலேயே ஓடி போய் உள்ளே ஏறுகிறார். இதை பார்த்த மற்றொருவர் தானும் அதுபோல ஓடும் ரெயிலில் ஏற முயற்சிக்க, கால் தடுமாறி ரயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கி கொள்கிறார். ரயிலின் கம்பிகளை அவர் இறுக பற்றியிருந்ததால் அவரை ரயில் இழுத்து கொண்டு செல்கிறது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரயில்வே போலீஸும், பொதுமக்களும் அவரை காப்பாற்ற ரயிலின் பின்னாலேயே ஓடுகிறார்கள். ரயில்வே போலீஸின் உதவியால் அவர் உயிருடன் மீட்கப்பட்டார். இந்த வீடியோவை ஷேர் செய்த ரயில்வே அமைச்சகம் “தயவு செய்து பயணிகள் யாரும் ஓடும் ரயிலில் ஏற முயற்சிக்க வேண்டாம். இவர் ரயில்வே போலீஸின் முயற்சியால் உயிர் பிழைத்துள்ளார். ஆனால் எப்போதுமே அதிர்ஷ்டம் துணை புரியாது” என்று பதிவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்