மத்திய அமைச்சர்கள் மிரட்டுகின்றனர்: குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (20:04 IST)
தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் மிரட்டுகிறார்கள் என திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை காங்கிரஸ் பிரமுகர் குலாம்நபி ஆசாத் மாநிலங்களவையில் இன்று தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த சட்டத்தின் திருத்த வரைவு மசோதா கடந்த 19ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இந்த சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது 
 
இதனை அடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யுமாறு அவையின் துணை தலைவர் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் இந்த மசோதா விரைவில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
 
இந்த நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற போதிய ஆதரவு இல்லாததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் மிரட்டுவதாக குலாம் நபி ஆசாத் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார் இதனால் மாநிலங்களில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்