நாயை அடிப்பது போல் அடியுங்கள்.. பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்தவர்களை அடிக்கச் சொன்ன அமைச்சர்..!

Mahendran

வெள்ளி, 5 ஜனவரி 2024 (17:40 IST)
தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நாயை அடிப்பது போல் அடியுங்கள் என்று சொன்ன அமைச்சரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருப்பவர் அப்துல் சத்தார். இவர்  தனது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது  நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். 
 
இந்த நடன நிகழ்ச்சியை பார்க்க ஏராளமானவர் வந்தபோது திடீரென சலசலப்பு ஏற்பட்டதால் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதனால் கடுப்பான அமைசச்ர் அப்துல் சத்தார் மேடைக்கு வந்து மைக்கை வாங்கி  நிகழ்ச்சியில் தகராறு ஈடுபடுபவர்களை நாயை அடிப்பது போல் அடியுங்கள் என்று போலீசாரை நோக்கி கூறினார் 
 
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதை அடுத்து அவருக்கு  அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து அமைச்சர் அப்துல் சத்தார் வருத்தம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்