`தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரியை விட அதிகமாக நிதி கொடுத்திருக்கிறோம்; அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Siva

வெள்ளி, 5 ஜனவரி 2024 (08:09 IST)
தமிழ்நாட்டில் இருந்து கிடைத்த வரியை விட அதிகமாக தமிழகத்திற்கு நிதி கொடுத்துள்ளோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தான் அதிக வரி கொடுக்கப்படுகிறது என்றும் ஆனால் தமிழகத்திற்கு குறைவான நிதிதான் வழங்கப்படுகிறது என்றும் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விளக்கத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசால் 2014 ஆம் ஆண்ட்டு முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் வரை வழங்கப்பட்ட நிதி ரூ.2,88,627 கோடி. இதில் மானியமாக ரூ.2,58,338 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சிறப்பு உதவியாக வட்டியில்லா கடன் ரூ.6,412 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-2023 மார்ச் வரை தமிழ்நாட்டிடமிருந்து மத்திய அரசு ரூ.6.23 லட்சம் கோடியை வரியாக பெற்றிருக்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.6.96 லட்சம் கோடியைக் கொடுத்திருக்கிறது. எனவே தமிழ் நாட்டிடமிருந்து வாங்கிய வரியை விடவும் அதிகமாக கொடுத்திருக்கிறோம் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்