ஐயப்ப பக்தர்களுக்கு 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள்..! அனுப்பி வைத்த அமைச்சர் சேகர்பாபு..!!

Senthil Velan

வெள்ளி, 5 ஜனவரி 2024 (13:49 IST)
தமிழ்நாடு திருக்கோயில்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
 
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் புனித யாத்திரை சென்று வருகின்றனர். 
 
அவ்வாறு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை,  தமிழ்நாடு திருக்கோயில்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் 6  கண்டெய்னர் லாரிகள் மூலம் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
ALSO READ: ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா..! டி20 போட்டிகள் இன்று தொடக்கம்..!!
 
இந்த வாகனங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை வானகரம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் இருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும் சபரிமலை தேவஸ்தான அலுவலர்களிடம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்படும்.
 
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், இணை ஆணையர்கள் லட்சுமணன், ஜெயராமன், மங்கையர்க்கரசி, ரேணுகாதேவி, உதவி ஆணையர்கள் முத்து, ரத்தினவேல், அரவிந்தன், வானகரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா சீனிவாசன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்‌‌.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்