உத்தரகாண்ட்டில் சுரங்க விபத்து: 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (19:29 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து ஏற்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தில்  முதல்வர் புஷ்கர் சிங் தமி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது.

இந்தச் சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் உள்ளே 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகிறது.

மேலும், 4.5 கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மா நில பேரிடர் மீட்புப் படைகள் தீயணைப்புத்துறையினர் பணியாளர்களை மீட்கத் தீவிரமாக ஈடுபட்டுனர்.

இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியான நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கு தேவையான தண்ணீர், ஆக்சிஜன், உணவு ஆகியவை குழாய்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்க வேண்டும் என  கோரிக்கைகள் எழுந்துள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்