பால், தயிர், காய்கறி, மது, வாகனங்கள் விலை திடீர் உயர்வு.. இலவச திட்டங்கள் காரணமா?
கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதனை அடுத்து இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 2000, பட்டதாரிகளுக்கு ரூபாய் 3000, டிப்ளமா படித்தவர்களுக்கு ரூபாய் 1500, இலவச மின்சாரம், மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் காரணமாக ஆண்டுக்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிகிறது.
இதனால் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள கர்நாடக அரசு அத்தியாவசிய பொருட்களின் விலையை சுமார் 30 சதவீதம் வரை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாமல் கர்நாடக அரசு திண்டாடி வருவதாக கூறப்படுகிறது.