வழக்கத்தை விட இந்த ஆண்டு சூரியன் அதிகமாக சுட்டெரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

Arun Prasath

சனி, 29 பிப்ரவரி 2020 (15:10 IST)
கோடை காலமான மார்ச் முதல் மே வரை இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வெயில் காலம் தொடங்கும். அது மே மாதம் வரை நீடிக்கும். இந்நிலையில் வழக்கத்தை இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னமே வெயிலின் தாக்கம் ஆரம்பித்துவிட்டது. எனினும் இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வழக்கமான வெப்ப நிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியாவில் ஆந்திர கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை இந்த ஆண்டு வெப்பம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்