மேகாலயா, திரிபுரா, நாகலாந்து: 3 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் ?

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (08:08 IST)
மேகாலயா, திரிபுரா, நாகலாந்து: 3 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் ?
மேகாலயா, திரிபுரா, நாகலாந்து ஆகிய மூன்று மாநிலங்களில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு மேகாலயா நாகலாந்து திரிபுரா ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று காலை 9 மணிக்கே முன்னிலை நிலவரங்கள் தெரியவரும் என்றும் கிட்டத்தட்ட 11 மணிக்கு இந்த மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது 
 
திரிபுரா, நாகலாந்தில் தலா 60 தொகுதிகளிலும் மேகாலயாவில் 59 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்துள்ளன. அதுமட்டுமின்றி தமிழ்நாடு (ஈரோடு கிழக்கு), ஜார்கண்ட் (ராம்கார்), மகாராஷ்டிரா (கஸ்பா பெத், சிஞ்வாத்), மேற்கு வங்கம் (சாகர்திகி), அருணாச்சலப் பிரதேசம் (லும்லா) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடந்துள்ளது என்பதும், இதன் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்