தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதில் உள்ள இந்தி எழுத்துக்களை மாற்றி தமிழில் வழங்குமாறு, சாகித்ய அகாடமிக்கு குமரியை சேர்ந்த எழுத்தாளர் குளச்சல் மு.யூசுப் கோரிக்கை விடுத்துள்ளார். இவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக சாகித்ய அகாடமி கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
2018-ஆம் ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருதை பிரபல எழுத்தாளர் குளச்சல்.மு.யூசுப் அவர்களுக்கு கிடைத்தது. இந்த விருது அவருக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்ட நிலையில் தனக்கு வழங்கப்பட்ட விருதில் இந்தியில் எழுதியிருப்பதை மேடையிலேயே சுட்டிக்காட்டி, விருது வாசகங்கள் தமிழில் வேண்டும் என குரல் எழுப்பியுள்ளார் எழுத்தாளர் குளச்சல்.மு.யூசுப்
இவரது குரலுக்கு மதிப்பு அளித்துள்ள சாகித்ய அகாடமி விருது குழுவினர் விருதில் உள்ள இந்தி எழுத்துகளுக்கு பதிலாக தமிழ் எழுத்துக்களை இணைப்பது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர். இவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டால் தமிழக எழுத்தாளர்களுக்கும் தமிழுக்கும் மிகப்பெரிய பெருமை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது