மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல்!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (15:29 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெங்கு காய்ச்சல்!
 
காங்கிரஸ் கட்சியின் பழம்பெரும் தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அவர்கள் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை பிரதமராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது. இதனையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியது. 
 
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் உறுதியானதாக கூறியுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அவரின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்