மூதாட்டியின் காலில் செருப்பை மாட்டிவிட்ட பிரதமர் மோடி

திங்கள், 16 ஏப்ரல் 2018 (10:55 IST)
சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் 127வது பிறந்த நாள் சமீபத்தில் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் இன்று சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாபூர் என்ற இடத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
 
இந்த விழாவில் பாரத பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் சமூக தொண்டுகள் செய்த தலித் பெண்கள் ஒருசிலர் மேடைக்கு வரவழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். இந்த நிலையில் ரட்னிபாய் என்ற முதிய பெண் மேடையில் ஏறி வந்து கொண்டிருந்தபோது திடீரென அவரது செருப்பு நழுவியது. இதனைப்பார்த்த பிரதமர் மோடி, உடனே அவரை கைத்தாங்கலாக பிடித்து நழுவிய செருப்பை கையில் எடுத்து அந்த மூதாட்டியின் காலின் அணிய உதவினார். பிரதமரின் இந்த நெகிழ்ச்சியான உதவி அனைத்து ஊடகங்களிலும் புகைப்படங்களுடன் வெளிவந்து வைரலாகியுள்ளது. 
 
இந்த விழாவில் 'அயூஷ்மான் பாரத்' என்ற சுகாதார பாதுகாப்பு திட்த்தை அறிமுகம் செய்த பிரதமர் மோடி கூறியதாவது: நான் இந்த பகுதி வளர்ச்சிக்காக தற்போது வருகை தந்துள்ளேன். விவசாயிகளின் நலன் ஒன்றே எங்கள் உயிர் மூச்சு. விவசாயிகளின் முன்னேறத்திற்காக எங்கள் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது போல் பொதுமக்களின் உடல் நலனிலும் அக்கறை செலுத்தி வருகிறோம். அம்பேத்கர் கனவை நிறைவேற்றவும், அவரது எண்ணங்களை செயல்படுத்தவும் நாங்கள் உழைக்கிறோம்' என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்