5ஜி தொழில்நுட்பத்தால் கொரோனா பரவவில்லை – தொலை தொடர்புத் துறை விளக்கம்

புதன், 19 மே 2021 (16:04 IST)
இந்தியாவில் கொரோனா பரவலுக்கு 5ஜி தொழில்நுட்பம் காரணம் என பரவி வரும் வதந்தி குறித்து தொலைத்தொடர்பு துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தினசரி பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் குறித்த பல்வேறு போலியான செய்திகள், வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அப்படியாக 5ஜி தொழில்நுட்பத்தால்தான் இந்தியாவில் கொரோனா பரவுகிறது என வாட்ஸப் உள்ளிட்ட செயலிகளில் பார்வேர்டு செய்யப்பட்ட போலி செய்தி வேகமாய் பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தொலைத்தொடர்பு துறை ”5ஜி தொழில்நுட்பத்திற்கும் கொரோனாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. செல்போன் கோபுரங்களில் 5ஜி தொழிநுட்பம் சோதனை தொடர்பாக வெளியாகும் தகவல்கள் தவறானவை. 5ஜி இணைப்பு சோதனை இந்தியாவில் எங்கும் தொடங்கப்படவில்லை” என கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்