மனைவிக் கொலை… பின்னணியில் கணவன் மற்றும் தங்கை ! திகைக்க வைத்த காரணம் !

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (08:28 IST)
உத்திர பிரதேச மாநிலத்தில் கூலிப்படை அனுப்பி மனைவியைக் கணவரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் சில மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இது சம்மந்தமாக கணவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை செய்து வந்தனர்.  அப்போது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது கணவரின் மேல் சந்தேகம் எழுந்துள்ளது.

போலிஸார் கணவனை விசாரிக்க அவர் மனைவியைக் கொலை செய்ய ஆட்களை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. கொலைக்கார காரணமாக அவர் சொன்னது இன்னும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. அந்தக் கணவரும் பெண்ணின் தங்கையும் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட அவர்கள்மனைவியைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர். வீட்டுக்கு கூலிப்படையினரை அனுப்பி நகைகளைத் திருடுவது போல கொலை செய்ய சொல்லியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்