2019ல் பாஜகவை வெளியேற்றுவோம் ; இதுவே நம் கோஷம் - மம்தா பானர்ஜி அதிரடி

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2017 (15:55 IST)
2019ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து பாஜகவை வெளியேற்றுவோம் என்பதே எங்களுடைய கோஷம் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


 

 
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழா நாடு முழுவதும் இந்த மாதம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான விழாவில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு இன்று பேசினார். 
 
அதில் அவர் கூறும்போது “மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியின் கீழ் ஜனநாயகம், மதசார்பின்மை மற்றும் பொதுமக்களின் உரிமை ஆகியவை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு இந்தியாவிலிருந்து பாஜகவை வெளியேற்றுவோம் என்பதே நம் கோஷமாக இருக்கட்டும்” என  அவர் பேசினார்.
 
அடுத்த கட்டுரையில்