தவறான தகவலை பரப்ப கட்டளை: பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (07:39 IST)
மேற்குவங்க மாநில அரசுக்கு எதிராக தவறான தகவலை வெளியிடுமாறு தேசிய ஊடகங்களுக்கு பாஜக கட்டளையிட்டு உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது மத்திய உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் ஆட்டம் என்று நான் உறுதியாக கூறுவேன் என்று முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்
 
மேற்கு வங்க மாநிலத்துக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் தேசிய ஊடகங்கள் பாஜகவின் இந்த சதிக்கு துணையாக இருப்பது வருத்தத்துக்குரியது என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்
 
பெரும்பாலான தேசிய ஊடகங்கள் பாஜகவுக்கு ஆதரவாக செய்திகளையும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருவதாக ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ள நிலையில் தற்போது பகிரங்கமாகவே முதல்வர் மம்தா பானர்ஜி தங்களுடைய மாநிலத்தில் பொய் பிரச்சாரம் செய்வதற்கு தேசிய ஊடகங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்