வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற சூழ்ச்சி: மம்தா ஆவேசம்!

Webdunia
திங்கள், 20 மே 2019 (11:09 IST)
பொய்யான கருத்துகணிப்புகள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற சூழ்ச்சி நடக்கிறது என தெரிவித்துள்ளார். 
 
17வது மக்களவைக்கான 7 கட்ட தேர்தல்கள் நேற்றுடன் முடிவடைந்தன. இந்நிலையில் கருத்துகணிப்பு முடிவுகள் பல சேனல்களிலும் வெளியாகியுள்ளன. 
 
டைம்ஸ் நவ், நியூஸ் எக்ஸ், ரிபப்ளிக் ஆகிய பத்திரிக்கைகள் எடுத்த கருத்துக்கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையில் ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளன.
 
மேற்கு வங்கத்திற்கான கருத்து கணிப்பில் திரிணாமூல் காங்கிரஸ் 24 இடங்கள், பாஜக 16 இடங்கள், காங்கிரஸ் 2 இடங்கள் வெற்றிபெறும் என்னும் தகவலையும் வெளியிட்டிருந்தார்கள்.
 
இந்நிலையில் நேற்று டிவிட்டரில் பதிவிட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி “நான் கருத்துகணிப்புகளை ஒருபோதும் நம்புவதில்லை. அவை மக்களிடம் வீண் வதந்தியை பரப்புகின்றன. இப்படி பொய்யான கருத்துகணிப்புகள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற சூழ்ச்சி நடக்கிறது. எனவே மக்கள் யாரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்