ATM-ஐ தொடாமலேயே பணம் எடுக்கலாம்… புதிய முறை அறிமுகம்

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (23:34 IST)
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,76,583 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 7,745 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,35,206 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மக்கள் தினமும் மக்கள் ஏடிஎம் மையங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்கும்படி மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், இனி ஏடிஎம் மையங்களில் கார்டு இல்லாமலேயே எந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் வசதியை பேஎமெஸ் நிறுவனம் (Empays Payment Systems India) அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 40000 மையங்களில் இந்த முறை அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்