செல்போன் உபயோகிப்பதை கண்டித்த மேஜரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (17:07 IST)
ராணுவ வீரர் ஒருவர் செல்போன் பயன்படுத்தக்கூடாது என எச்சரித்த மேஜரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்ப்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ராணுவத்தில் வீரர்களுக்கு பல காட்டுபாடுகள் உண்டு. அதுவும் பணியின் போது அவர்களுக்கென சில விதிமுறைகள் உண்டு. காஷ்மீரில் 8வது தேசிய துப்பாக்கி படை பிரிவு வீரர் ஒருவர் பணியின் போது செல்போன் பயன்படுத்தியுள்ளார். ராணுவ பிரிவின் மேஜர் ஷிகார் தபா அந்த வீரரை செல்போன் பயன்படுத்தக் கூடாது என பலமுறை எச்சரித்துள்ளார். 
 
ஆனால் அந்த ராணுவ வீரர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து மேஜர் செல்பொனை அவரிடம் இருந்து பிடிங்கியுள்ளார். அதில் செல்போன் கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் மேஜர் ஷிகர் தபாவுக்கும், அந்த ராணுவ வீரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ராணூவ வீரர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மேஜரை சுட்டார்.
 
காயமடைந்த மேஜர் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்