இனி கிளாம்பாக்கம் போக கஷ்டப்பட வேண்டாம்! ரயில் நிலையம் திறப்பது எப்போது?

Prasanth Karthick

ஞாயிறு, 19 ஜனவரி 2025 (09:17 IST)

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்ல அருகிலேயே ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், புதிய ரயில் நிலையம் திறக்கப்படும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சென்னையில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில், அனைவரும் ஊருக்கு சென்று வர சென்னையின் மையத்தில் அமைந்திருந்த கோயம்பேடு பேருந்து நிலையம் முக்கியமானதாக இருந்தது. தற்போது சென்னையில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து, தாம்பரம் தாண்டி வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.

 

தற்போது கிளாம்பாக்கம் செல்ல அனைத்து மக்களும் பேருந்துகளையே நம்பியுள்ளனர். இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கூட பண்டிகை நாட்களில் அதிக கூட்டம் மற்றும் சென்னை மையப்பகுதியிலிருந்து கிளாம்பாக்கம் செல்லவே ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆவது போன்றவை பயணிகளுக்கு மிக சிரமமாக இருந்து வருகிறது.

 

இதனால் மிக விரைவாக கிளாம்பாக்கத்தை சென்றடையும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே மின்சார ரயில்கள் நின்று செல்லும் விதமாக புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

 

கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பணிகள் முடிவை எட்டியுள்ள நிலையில் வரும் மே மாதம் ரயில் நிலையம் திறக்கப்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை மத்திய பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 30 நிமிடங்களுக்குள் சென்றுவிட முடியும் என கூறப்படுகிறது. புதிய ரயில் நிலையம் திறக்கப்படுவது பயணிகளை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்