மோடி தாடியை ஷேவ் செய்ய 100 ரூபாய் அனுப்பிய நபர்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (14:18 IST)
பிரதமர் மோடி தாடியை செய்துக்கொள்ள கூறி மகாராஷ்டிராவை சேர்ந்த டீக்கடை காரர்  ரூ.100 பணம் அனுப்பிவைத்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. 
 
மகாராஷ்டிர மாநிலம் பாராமதி பகுதியை சேர்ந்த அணில் மோர் என்பவர் டீ கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் பிரதமர் மோடிக்கு ரூ. 100 மணி ஆர்டர் மூலம் அனுப்பி வைத்து கடிதம் எழுதுதியுள்ளார் அந்த கடிதத்தில், பிரதமர் மோடி நாட்டில் வேலை வாய்ப்பையும், மருத்துவ வசதிகளையும் வளர்க்காமல் அவர் தாடி வளர்த்து கொண்டு இருக்கிறார். 
 
அவர் மீது எனக்கு மிக அதிக மரியாதை உண்டு. அவர் எதையாவது அதிகரிக்க வேண்டுமென நினைத்தால் கொரோனாவால் குடும்பத்தினரை இழந்த மக்களுக்கும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும். அவர் ஒரு மாபெரும் தலைவர். அவரை புண்படுத்தும் எண்ணம் எனக்கில்லை” என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்