மகாராஷ்டிரா வேளாண் அமைச்சர் மரணம்!

Webdunia
வியாழன், 31 மே 2018 (10:16 IST)
மகாராஷ்டிரா மாநில வேளான் துறை அமைச்சர் பண்டுரங் புந்தலிக் பண்ட்கர் நேற்றிரவு மாரடைப்பால் மரணமடைந்தார்.

 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் வேளாண் அமைச்சரும், மூத்த பாஜக தலைவரும், அம்மாநில முன்னாள் பாஜக தலைவருமான  பண்டுரங் புந்தலிக் பண்ட்கர் நேற்றிரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 67. நேற்றிரவு அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. 
 
இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரது இழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநில வேளாண் அமைச்சரான இவர் கடந்த 3 முறை அகோலா மாவட்ட மக்களவை தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்