இதனையடுத்து மின்சார அலுவலகத்திற்கு என்ற அவர், தனக்கு வழக்கமாக 1000 ரூபாய் தான் கரண்ட் பில் வரும், ஆனால் இப்பொழுது கரண்ட் பில் 8 லட்சம் வந்திருக்கிறது என்றார். அங்கிருந்த அதிகாரி, இதனைப்பற்றி முழுமையாக விசாரிக்காமல், அந்த தொகையை கட்டும்படி கூறிவிட்டார்.
இதனால் மனமுடைந்த ஜெகநாத் ஷெல்கி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஷெல்கி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், 2000 ரூபாய் வந்த கரண்ட் பில்லை மின்சாரத் துறை ஊழியர் 8 லட்சம் ரூபாய் என தவறுதலாக குறித்துள்ளார். இதனையடுத்து போலீசார் சம்பத்தப்பட்ட ஊழியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.