மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கி பல மோசடிகள் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு கலந்துள்ளது. குறிப்பாக சத்தீஸ்கர் மற்றும் மும்பை போலீஸாருடன் மகாதேவ் சூதாட்ட செயலி மூலம் நடந்த பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறையின் வேண்டுகோளின் படி இன்டர்போல் போலீஸார் ரெட் நோட்டீஸ் வழங்கி இருந்த நிலையில் தற்போது அவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.