மணல் கொள்ளையை தடுத்த வி.ஏ.ஓவுக்கு கன்னத்தில் அறை! – அறைந்த நபர் கைது!

புதன், 13 டிசம்பர் 2023 (12:48 IST)
ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் கன்னத்தில் அறைந்த நபரை போலீசார் அதிரடி கைது


 
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் வனஜா முருகன் இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து நடத்துனராக பணியாற்றி வருகிறார்

இந்நிலையில் வனஜா முருகன் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு எந்த ஒரு ஆவணம் இல்லாமல் திருட்டுத்தனமாக ஏரியில் மண் அடித்து வந்த நிலையில் இதனை கிராம நிர்வாக அலுவலர் சர்மா பொக்லின் மற்றும் டாக்டர் டிப்பர்களை தாசில்தார் மூலம் பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த வனஜா முருகன் ஆறு மாத காலமாக காத்திருந்த நிலையில் நேற்று விஏஓ பணி நிமித்தமாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொழுது சுமார் இருவருக்கும் மேற்பட்டோர் முன்பு வனஜா முருகன் சர்மாவை பலமாக தாக்கி உள்ளார். இதனை கண்ட மற்ற ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

ஆய்வாளர் வீரமணி விரைந்து வந்து வனஜா முருகன் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்