கோலா குடித்த போலீஸ்; கொலை காண்டான நீதிபதி! – இப்படியொரு தீர்ப்பா?

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (10:51 IST)
குஜராத் மாநிலத்தில் ஆன்லைன் விசாரணையின்போது காவலர் கோகோ கோலா அருந்தியதற்கு வழங்கிய நூதன தண்டனை வைரலாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக குஜராத்தில் நீதிமன்ற வழக்குகள் ஆன்லைன் மூலமாக நடந்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் சாலையில் இரு பெண்களை காவலர்கள் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு ஆன்லைன் மூலம் விசாரணைக்கு வந்தது.

அதில் காணொலியில் காவல் ஆய்வாளர் ரத்தோட் என்பவரும் கலந்து கொண்டுள்ளார். விசாரணையின்போது அவர் கையில் கேன் கொகோ கோலா வைத்துக் குடித்துக் கொண்டிருந்துள்ளார். இதை பார்த்து கடுப்பான நீதிபதி அரவிந்த் குமார், ரத்தோடை கண்டித்துள்ளார்.

மேலும் காவல்ர் ஆய்வாளர் ரத்தோட் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு 100 கொகோ கோலா வாங்கி தர வேண்டும் என்றும், அதை செய்யாத பட்சத்தின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்