திருமணம் செய்யும் ஜோடிகள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி பொதுநல மனு ஒன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "அவ்வாறு பரிசோதனை செய்யும்போதுதான் திருமணம் செய்யப் போகும் ஜோடிகளுக்கு ஏதேனும் குறைபாடு இருக்கிறதா என்பது தெரியவரும். இதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சனை இல்லாமல் இருக்கும்" என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "இதுபோன்ற சட்டங்களை கொண்டு வர நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அரசுக்கு நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவைப் பிறப்பிக்க முடியாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.