வங்கக்கடலின் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கரையை கடப்பது எங்கே?
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (10:08 IST)
வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று வங்கதேசத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் வடக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு பகுதி தோன்றியது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது வலுப்பெற்று உள்ளது.
இன்று இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வங்கதேசத்தின் கேபுபரா என்ற கடற்கரை அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை கரையை கடக்கும் என்பதால் அந்த சமயத்தில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.