லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

வெள்ளி, 27 ஜூலை 2018 (21:14 IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் கடந்த எட்டு நாட்களாக வேலை நிறுத்தம் செய்ததால் பலகோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்ததோடு, கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டது
 
இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கடந்த 8 நாட்களாக நடைபெற்ற லாரி வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இதனையடுத்து இன்று நள்ளிரவு முதல் இந்தியா முழுவதும் லாரிகள் இயங்கும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்