லாரி வேலைநிறுத்தம் எதிரொலி: விவசாயிகளுக்கு இலவச பேருந்து

சனி, 21 ஜூலை 2018 (19:29 IST)
நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் நேற்றுமுதல் நடைபெற்று வருகிறது. எனவே அத்தியாவசிய பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விவசாய பொருட்களில் சிலவற்றை உடனே சந்தைக்கு கொண்டு செல்லவில்லை என்றால் அந்த பொருள் கெட்டு போய்விடும்
 
இந்த நிலையில் விவசாயிகளின் இந்த சிரமத்தை தவிர்க்க தமிழக அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: லாரிகள் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு விவசாய விளைபொருட்களை, பிற பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் எவ்வித கட்டனமும் இன்றி, இலவசமாக ஏற்றி செல்ல அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுக்கும் உத்தர்விடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
 
இந்த உத்தரவு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் அரசு பேருந்துகளில் உள்ள டிரைவர், கண்டக்டர்கள் இதனை சரியாக கடைபிடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்