பெண் குழந்தை தொடர்பான சின்னம் வடிவமைப்புப் போட்டி - ரொக்கப் பரிசு ரூ.50,000

வெள்ளி, 25 ஜூலை 2014 (17:22 IST)
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் "பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தையைப் படிக்க வைப்போம்" என்ற கருத்தரங்குக்குச் சின்னம் வடிவமைப்புப் போட்டியை (Logo Design Competition for ‘Beti Bachao Beti Padhao’ Campaign) 2014 ஜூலை 24 அன்று அறிவித்துள்ளது. வெற்றி பெறும் சின்னத்திற்கு ரூ.50,000 ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டு, தேசிய அங்கீகாரமும் அளிக்கப்படும்.

 
குடியரசுத் தலைவர் தனது நாடாளுமன்ற உரையில் பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் கல்விக்காக நாடு முழுவதும் கருத்தரங்குகள் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டார். இதற்காக மத்திய நிதி அமைச்சர், 2014-15ஆம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் ரூ.100 கோடி அறிவித்தார். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பே அரசின் முக்கிய நோக்கமாகும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி மேனகா காந்தி தெரிவித்தார்.
 
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் "பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தையைப் படிக்க வைப்போம்" என்ற கருத்தரங்குக்காக வெளியிட உள்ள எல்லா விளம்பரங்களிலும் இந்தச் சின்னம் பயன்படுத்தப்படும்.
 
இந்தச் சின்னம் வடிவமைப்புப் போட்டியின் குறிக்கோள்கள்:
 
• பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தவும் பெண் குழந்தையின் முக்கியத்துவத்தைப் பரப்பும் வகையிலும் இந்தச் சின்னம் உருவாக்கப்பட வேண்டும். 
 
• பெண்கள் மேம்பாட்டில் கல்வியின் முக்கியத்துவம் 
 
• இன்றைய இளையோர், நாளைய பெற்றோர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இளையோர் பங்கேற்பை உறுதி செய்தல்
 
• போட்டிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பொது மக்கள் பங்கேற்பின் மூலம் உரிமையாளர்கள் அவர்கள்தான் என்பதை உறுதி செய்வதும்
 
குறைந்து வரும் பெண் குழந்தை பிறப்பு விகிதத்தைச் சரிசெய்ய மத்திய அரசின் பல்வேறு முக்கிய அமைச்சகத்தின் முயற்சியாக இந்த ÔÔபெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தையைப் படிக்க வைப்போம்ÕÕ என்ற கருத்தரங்கு அமையும். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த முயற்சிக்கு முக்கிய பங்கு அளிக்கும். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஆகிய அமைச்சகங்கள், இந்த முயற்சிக்கு உதவியாக இருக்கும். 
 
இந்தப் போட்டிக்கு வடிவமைத்த சின்னங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள், ஆகஸ்டு 3, 2014. [email protected] என்ற முகவரிக்கு உங்கள் சின்னங்களை அனுப்பலாம். மேலும், இந்தப் போட்டியின் விவரங்களை  www.wcd.nic.in என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்