மறைந்த பஞ்சாப் பாடகரின் தாய் கர்ப்பம்.! 58 வயதில் கர்ப்பமானார்.!!

Senthil Velan
புதன், 28 பிப்ரவரி 2024 (12:54 IST)
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் தாய் செயற்கை கருத்தரித்தல் முறையில் கர்ப்பமாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
சரண் கவுர் - பால்கவுர் சிங் தம்பதியின் ஒரே மகன் சித்து மூஸ்வாலா. பஞ்சாப்பின் புகழ் பெற்ற பாடகரான இவர், கடந்த 2022ஆம் ஆண்டு மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சித்து மூஸ்வாலாவின் பெற்றோர் மற்றும் ரசிகர்களுக்கு பேரிடியாக இருந்தது.
 
இதையடுத்து, சித்துவின் பெற்றோர்கள் ஊடகங்களில் இருந்து விலகியே இருந்தனர். இந்நிலையில், தற்போது சித்து மூஸ்வாலாவின் தாய் சரண் கவுர் (58) செயற்கை கருத்தரித்தல் முறையில் கர்ப்பமாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, அடுத்த சில மாதங்களில் அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பார் எனக் கூறப்படுகிறது.
 
மேலும், இதன் காரணமாகத் தான் சரண் கவுர் மற்றும் பால்கவுர் சிங் தங்களின் நெருங்கிய வட்டாரங்களைத் தவிர, பொதுமக்கள் மற்றும் சித்து மூஸ்வாலா ரசிகர்களிடமிருந்து ஒதுங்கி இருந்ததாகத் தெரிகிறது.

மேலும், சரண் கவுர் தற்போது மருத்துவக் குழு மேற்பார்வையில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மூஸ்வாலா அவருடைய பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால், அவரின் மரணத்திற்கு பிறகு சித்துவின் குடும்பம் தனியாகவே இருந்தது.

ALSO READ: அரசு பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர்கள் சேர்க்கை.! எப்போது தெரியுமா..?
 
இந்நிலையில், ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப் பிறகு சித்துவின் பெற்றோர், செயற்கை கருத்தரித்தல் முறையில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க போகும் தகவல், தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்