ராஜினாமா செய்தால் கொஞ்சமாவது மரியாதை மிஞ்சும்: நிர்மலா சீதாராமனுக்கு குஷ்பு யோசனை

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (23:15 IST)
கடந்த சில நாட்களாக ரபேல் ஊழல் குறித்த பிரச்சனை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக முன்னாள் பிரான்ஸ் அதிபர் இதுகுறித்து கூறிய கருத்தால் இந்த விஷயம் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இந்த நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்த சர்ச்சையில் பாஜகவின் பொய் அம்பலமாகிவிட்டதால் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு ராஜினாமா செய்தால் சிறிதளவாவது மரியாதை மிஞ்சும் என்றும் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு அறிவுரை கூறியுள்ளார். மேலும் டுவிட்டரில் தன்னை பிளாக் செய்ததற்கு கண்டனமும் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக ரபேல் ஊழல் குறித்து பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹாலண்டே, 'ரபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. பிரான்ஸ் நாட்டுக்கு எந்த ஒரு வேறு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அம்பானி குழுமத்துடன். மட்டுமே இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது" என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்