நைட்டோடு நைட்டா வீட்டை விட்டு ஓடிய நாயுடு: சும்மாவா ஜெகன் கொடுத்த வார்னிங்!

Webdunia
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (12:45 IST)
சந்திரபாபு நாயுடுவின் வீடு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியது போலவே வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. 

 
 
சமீபத்தில் ஆந்திராவில் பெய்த கனமழையாலும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பபெருக்கு ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள சந்திரபாபு நாயுடு வீட்டின் தரைத்தளம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ள வரும் என எச்சரிக்கை விடுத்த போதே சந்திரபாபு நாயுடு தனது சொகுசு கார்களை மங்களகிரிக்கு கொண்டு சென்றுவிட்டார். 
மேலும் வீட்டின் கீழ்தளத்தில் இருந்த வீட்டின் பொருட்களை எல்லாம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்ட குடும்பத்தினருடன் அவர் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறி ஐதராபாத்திற்கு குடி புகுந்துவிட்டார். 
 
இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏறபட்டால் கரையோரம் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள் பாதிக்கப்படும் என்று கூறி அப்பகுதியில் இருப்பவர்களை வெளியே சொல்லு நோட்டீஸ் அனுப்பினார். 
ஆனால் அதை ஏற்காமல் சந்திரபாபு நாயுடு இன்று அவதிப்படுகிறார் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஆளராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். கிருஷ்ணா நதிக்கரையில் சந்திரபாபு நாயுடு குடியிருந்தது வாடகை வீடுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்