150 பேரிடம் மோசடி செய்த குஷ்பு: எல்லாமோ பொய்!

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2016 (19:09 IST)
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த 26 வயதான குஷ்பு ஷர்மா என்ற பெண் இது வரை 150-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்துள்ளார். இவரை சமீபத்தில் போலீசார் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.


 
 
குஷ்பு ஷர்மா பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர். ஆனால் இவர் மற்றவர்களிடம் அறிமுகம் ஆவதோ தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, வக்கீல், பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தின் அதிகாரி, சினிமா நடிகை, அரசியல்வாதியின் மகள் இப்படி பல முகங்களில்.
 
நன்றாக பழகி பின்னர் அவர்களிடம் பணம் பறித்துவிட்டு மாயமாவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதுவரை 150-க்கும் மேற்பட்டோரிடம் தன் கைவரிசையை காட்டிய குஷ்பு ஷர்மா தற்போது வசமாக போலீசிடம் சிக்கினார்.
 
பெங்களூரில் உள்ள சங்கீத் யாங்கி என்ற வழக்கறிஞரிடம் தான் ஒரு வழக்கறிஞர் என அறிமுகமாகி அவரிடம் இருந்து பணம், கார் என கொள்ளையடித்துக்கொண்டு மாயமாகி உள்ளார் குஷ்பு ஷர்மா. இதனால் பதறிப்போன சங்கீத் யாங்கி குஷ்பு ஷர்மாவுக்கு போன் செய்தால் அவரது நம்பர் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது.
 
இதனையடுத்து அவர் மீது போலீஸில் புகார் கூறப்பட்டு அவரை தீவிரமாக தேடி கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இது வரை 150-க்கும் மேற்பட்டோரிடம் குஷ்பு மோசடி செய்தது தெரியவந்துள்ளது. குஷ்புவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்