இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார் எனினும் கேரளா மாநில அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது
ஒரு கட்டத்தில் கேரளாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளே இருக்காது என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் திடீரென அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது
சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 10 ஆயிரத்தை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கொரோனா வைரஸால் கேரளாவில் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டது
ஓணம் பண்டிக்கைக்கு பின்னரே இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளது என்பதும் நேற்று மட்டுமே கேரளாவில் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
மருத்துவர்களின் இந்த எச்சரிக்கையை அடுத்து கேரளாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கேரள அரசு ஊரடங்கு உத்தரவு குறித்த எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது