11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் முக்கிய தடுப்பூசி.. அரசின் அதிரடி முடிவு..!

Siva

செவ்வாய், 29 ஜூலை 2025 (14:35 IST)
கேரளாவில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் வகையில் ஒரு முக்கிய முடிவை மாநில அரசு எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவிகளுக்கு HPV தடுப்பூசியை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
 
இந்த HPV தடுப்பூசியானது, 9 முதல் 14 வயதுக்குள் செலுத்தப்படும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனினும், 26 வயது வரையிலும் இந்த தடுப்பூசியை செலுத்தலாம் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது பெண்களை பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகும். HPV தடுப்பூசி இதற்கு ஒரு முக்கிய தடுப்பு நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்த, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், இது குறித்து பெற்றோர்களுக்கும் விரிவான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
 
கேரள மாநில சுகாதார துறை, இந்த தடுப்பூசி இயக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, பெண்கள் மத்தியில் பரவலான பங்கேற்பு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இது கேரளாவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கான ஒரு முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்