பள்ளி மாணவனை ட்யூசனுக்கு அழைத்து உல்லாசம்!? – ஆசிரியை கைது!

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (10:51 IST)
ட்யூசன் சென்ற மாணவனை பாடம் நடத்த வேண்டிய ஆசிரியையே வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தி பகுதியில் மாணவன் ஒருவன் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளான். அந்த பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியையிடம் மாணவன் மாலை நேரத்தில் ட்யூசன் சென்று வந்துள்ளான்.

அந்த மாணவன் மீது ஆசைக் கொண்ட அந்த ஆசிரியை ட்யூசன் வரும் மாணவனுக்கு மது கொடுத்து அவன் போதையில் இருக்கும்போது அவனை வன்கொடுமை செய்துள்ளார். இதனால் படிப்பில் கவனம் சிதறிய மாணவன் தேர்வுகளை சரிவர எழுதாமலும், நண்பர்களோடு சரியாக பேசாமலும் இருந்துள்ளான்.

ALSO READ: ஊர் புகுந்து தாக்கிய கரடி? உடல்நல குறைவால் பலி! – தென்காசியில் பரபரப்பு!

இதுகுறித்து சக ஆசிரியர்கள் அவனை அழைத்து கவுன்சிலிங் நடத்தியபோது மேற்கண்ட விவரங்களை அவர்களிடன் மாணவன் கூறியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்