டூட்டி நேரத்தில் நடிகையுடன் உல்லாச பயணம்: சிக்கிய காவல்துறை டிஐஜி

Webdunia
புதன், 24 மே 2017 (06:11 IST)
கேரள மாநில சிறைத்துறை டிஐஜி பிரதீப் என்பவர் டூட்டி நேரத்தில் அரசு வாகனத்தில் பிரபல நடிகை ஒருவருடன் உல்லாச பயணம் செய்த விவகாரம் அங்கு தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. அந்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன



 


கடந்த மார்ச் மாதம் கேரளாவில் சிறைநாள் கொண்டாட்டம் நடந்தது. அன்றைய தினம் சிறைத்துறை டிஐஜி பிரதீப், பிரபல நடிகை ஒருவருடன் உல்லாச பயணம் சென்று கொண்டிருந்தபோது பத்தினம்திட்டாம் என்ற பகுதியில் கையும் களவுமாக பிடிபட்டார்.

இந்த விவகாரம் ஊடகங்களில் பூதாகரமாக வெடித்ததால் தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தீர விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரள மாநில சிறைத்துறை தலைமை அதிகாரியான ஸ்ரீலேகாவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்