மகனுடன் தேர்வு எழுதிய அம்மா, அப்பாவும் பாஸ்! அடுத்து காலேஜ்தான்! – கேரளாவில் ஆச்சர்யம்!

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (10:46 IST)
கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் அவரது மனைவுயும் தனது மகனுடன் ப்ளஸ் டூ தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் மலப்புரம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா. இவரது மனைவி நுசைபா. இவர்களது மகன் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நுசைபா 12ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போதே முஸ்தபாவிற்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். இதனால் 12ம் வகுப்பை முடிக்க இயலாதது குறித்து நுசைபாவுக்கு நீண்டகாலமாக வருத்தம் இருந்து வந்துள்ளது. அவரது விருப்பத்தை அறிந்த முஸ்தபா தானும் 12ம் வகுப்பு தேர்வுகளை எழுத விரும்பியுள்ளார்.

இருவரும் அந்த பகுதியில் உள்ள கேரள எழுத்தறிவு மையத்தின் சமநிலை தேர்வுகளில் சேர்ந்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். மகனும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மூவரும் பட்டப்படிப்புக்காக கல்லூரியில் சேர உள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்