இந்திய செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.. இங்கிலாந்து சுகாதாரத்துறை முடிவு..!

வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (10:17 IST)
அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள செவிலியர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு தர முடிவு செய்துள்ளதாக இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள செவிலியர்கள் பலர் அரபு நாடுகள் உட்பட பல வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள வேல்ஸ் என்ற பகுதியில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு சுமார் 900 செவிலியர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்களை இந்தியா உட்பட ஒரு சில நாடுகளில் இருந்து நியமனம் செய்ய அந்நாட்டுக்கு சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. 
 
அனுபவம் மற்றும் உடனடியாக பணியில் சேர்வதற்கான ஆர்வத்தின் அடிப்படையில் இந்த தேர்வு இருக்கும் என்றும் இந்த நிதியாண்டில் மட்டும் 350 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலும் இந்தியாவில் உள்ள கேரளாவில் இருந்து தேர்வாகி வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்