கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

வியாழன், 16 ஜூலை 2020 (20:31 IST)
கொரோனா வைரஸ் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது என்பதும் இன்று தமிழகத்தில் 4549 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 4,169 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும், இதனையடுத்து அம்மாநிலத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51,422 ஆக அதிகரிப்பு என்றும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கர்நாடகாவில் இன்று மட்டும் 104 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், மொத்த இறப்பு எண்ணிக்கை 1,032 ஆக உயர்வு
 
அதேபோல் மகாராஷ்டிராவில் இன்று மட்டும் மேலும் 8,641 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 8,641 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,84,281 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 266 பேர் கொரோனாவால் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்.
 
அதேபோல் கேரளாவில் இன்று மேலும் 722 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இன்று இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை கேரளாவில் கொரோனாவால் மொத்தம் 10,275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்